காமன்வெல்த்: இந்தய மல்யுத்த நட்சத்திரம் சுஷில்குமார் தங்கம் வென்றார்

  Newstm Desk   | Last Modified : 12 Apr, 2018 03:57 pm

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் இந்திய வீரர் சுஷில்குமார் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். 

ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்டு நகரில் காமன் வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று நடந்த மல்யுத்த போட்டியில் ஆடவருக்கான 74 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் சுஷில்குமார் தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ் போத்தாவை எதிர்த்து களமிறங்கினார். இதில் 10-0 என்ற புள்ளி கணக்கில் போத்தாவை வீழ்த்தி தங்கப்பதகத்தை வென்றார் சுஷில்குமார்.

காமன்வெல்த் போட்டியில், சுஷில்குமார் தொடர்ச்சியாக 3 முறை தங்கம் வென்றுள்ளார். இதற்கு முன்னதாக ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டிகளில் வெள்ளி மற்றும் தங்கப்பதக்கம் வென்றுள்ள சுஷில்குமார், 2010ம் ஆண்டு உலக சாம்பியன் பட்டமும் வென்றார்.

இந்தியா தற்போது 14 தங்கம், 6 வெள்ளி மற்றும் 9 வெண்கலம் என 29 பதக்கங்களுடன் 3வது இடத்தில் தொடர்கிறது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close