காமன்வெல்த் போட்டி: துப்பாக்கி சுடுதலில் இந்தியாவிற்கு தங்கம்

  Newstm Desk   | Last Modified : 11 Apr, 2018 11:14 am

காமன்வெல்த் போட்டியில் டபுள் ட்ராப் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை ஸ்ரேயாஸி சிங் தங்கப் பதக்கம் வென்றார். 

ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் இந்தாண்டிற்கான காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகின்றது. 7வது நாளான இன்று நடைபெற்ற பெண்களுக்கான டபுள் ட்ராப் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை ஸ்ரேயாஸி சிங் தங்கம் வென்று அசத்தினார். இவருக்கு கடுமையான போட்டியாக திகழ்ந்த ஆஸ்திரேலியாவின் எம்மா இரண்டாவது இடத்தை பிடித்தார். இதில் இந்தியாவின் மற்றொரு வீராங்கனை வர்ஷா வர்மா 4வது இடம் பிடித்தார். 

தங்கம் வென்ற ஸ்ரேயாஸி சிங் 2014ம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் இதே பிரிவில் வெள்ளி பதக்கம் வென்றிருந்தார். 

முன்னதாக நடைபெற்ற ஆண்களுக்கான 50 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் ஓம் பிரகாஷ் மிதர்வால் வெண்கல பதக்கம் வென்றார். முதல் மட்டும் இரண்டாவது இடங்களின் முறையே ஆஸ்திரேலிய மற்றும் வங்கதேச வீரர்கள் வென்றனர். இதில் 10 மீட்டர் துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற ஜித்து ராய் 8வது இடம் பிடித்தார். 

இதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 24ஆக உயர்ந்துள்ளது. மொத்தமாக 12 தங்கம், 4 வெள்ளி மற்றும் 7 வெண்கல பதக்கங்களை இந்திய வீரர்கள் வென்றுள்ளனர். 

இன்று நடக்க உள்ள மகளிர் பேட்மிண்டன் போட்டியில் இந்திய நட்சத்திர வீராங்கனைகள் பி.வி.சிந்து மற்றும் சாய்னா கலந்து கெள்கின்றனர். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close