டி.என்.பி.எல் முதல் போட்டி: திருச்சி அணி 'த்ரில்' வெற்றி!

  Newstm Desk   | Last Modified : 12 Jul, 2018 10:40 am

ruby-trichy-warriors-start-tnpl-3-with-a-win

டி.என்.பி.எல் டி20 தொடரின் முதல் போட்டியில், திண்டுக்கல் அணிக்கு எதிராக விளையாடிய  திருச்சி அணி  4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது. 

தமிழ்நாடு பிரீமியர் லீக்(டி.என்.பி.எல்) டி20 தொடரின் மூன்றாவது சீசன் ஜூலை 11 முதல் ஆகஸ்ட் 12 வரை நடைபெறுகிறது. நேற்று தொடங்கிய முதல் போட்டியில், திண்டுக்கல் டிராகன்ஸ் - திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய திண்டுக்கல் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்துள்ளது. இதில், தொடக்க வீரர் ஹரி நிஷாந்த் 27 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார். இதில் ஒரு சிக்சர், 5 பவுண்டரிகள் அடங்கும். தொடர்ந்து ராமலிங்கம் ரோகித் 46, கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் 42 ரன்களும் எடுத்தனர். பந்து வீச்சை பொறுத்தவரை திருச்சி அணி தரப்பில் தக்‌ஷிணாமூர்த்தி குமரன், லக்‌ஷ்மி நாராயணன், எம்.எஸ்.சஞ்சய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

பின்னர் களமிறங்கிய திருச்சி அணி,  தொடக்க வீரர் பரத் சங்கர் சிறப்பாக ஆடி அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்தார். தொடர்ந்து வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, சுரேஷ் குமார் மற்றும் சோனு யாதவ் ஆகியோர் நின்று ஆடினர். சுமாராக போய்க்கொண்டிருந்த ஆட்டம் கடைசி ஓவரில் சூடு பிடித்தது. கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்டநிலையில், சுரேஷ் குமார் 2 சிக்சரும், எம்.எஸ்.சஞ்சய் ஒரு சிக்சரும் விளாச திருச்சி அணி 19.5வது ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. திண்டுக்கல் அணி தரப்பில் அதிகபட்சமாக அஸ்வின் மட்டும் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். முதல் ஆட்டமே விறுவிறுப்பாக சென்றதால் ரசிகர்கள் அடுத்தபோட்டியை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close