3வது இடத்தில் களமிறங்குவது கோலியா? ராகுலா? குழப்பத்தில் இந்திய அணி

  Newstm Desk   | Last Modified : 12 Jul, 2018 04:01 pm

virat-or-rahul-rohit-sharma-answers-to-crucial-question

இங்கிலாந்துக்கு எதிராக இன்று நடைபெறும் போட்டியில் 3வது இடத்தில் களமிறங்க போவது கோலியா? ராகுலா?

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முன்னதாக நடந்த 20 ஓவர் போட்டியில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது.

இந்நிலையில் இன்று முதல் ஒருநாள் போட்டிகள் தொடங்குகின்றன. இளம் கிரிக்கெட் வீரர் கே.ராகுல் இந்தாண்டு ஐபிஎல் தொடரில் காட்டிய அதிரடியை தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான போட்டியிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். 

முதல் டி 20 போட்டியில் சதம் அடித்து அசத்திய அவரால் இந்திய அணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ராகுலின் அதிரடிக் காரணமாக அவரை 3வது இடத்தில் களமிறக்க வேண்டும் என்று பலர் தெரிவித்து வருகின்றனர். ஆனால் வழக்கமாக அந்த இடத்தில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தான் களமிறங்குவார். 

எனவே இன்றைய போட்டியில் கோலியா? ராகுலா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து ரோகித் சர்மாவிடம் கேட்டபோது, "ராகுல் எந்த இடத்தில் களமிறங்குவார் என்று தெரியவில்லை. ஆனால் அவர் தற்போது சிறப்பான ஃபார்மில் இருக்கிறார். கேப்டன் கோலி எந்த இடத்தில் களமிறங்க நினைக்கிறார் என்று தெரியவில்லை. இது தான் தற்போதைக்கு முக்கியமான கேள்வியாக உள்ளது" என கூறியுள்ளார். 

இன்றைய போட்டியில் ராகுலுக்காக தனது இடத்தை கோலி விட்டுக்கொடுப்பாரா?

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close