தமிழக ஸ்குவாஷ் வீரர்களுக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர்

  Newstm Desk   | Last Modified : 02 Sep, 2018 02:50 pm
tamil-nadu-cm-announced-rs-30-lakhs-for-squash-players

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைகளுக்கு தலா ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை அறிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

18வது ஆசிய விளையாட்டு போட்டிகளில், பெண்கள் ஸ்குவாஷ் குழுப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த தீபிகா பல்லிக்கல் கார்த்திக், ஜோஷ்னா சின்னப்பா மற்றும் சுனாய்னா குருவில்லா ஆகிய ஆகியோருக்கு தலா ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். 

மேலும் அவர் வீராங்கனைக்கு அனுப்பிய வாழ்த்துக் கடிதத்தில், "18 வது ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்கள் ஸ்குவாஷ் பெண்கள் குழு போட்டியில் மற்றுமொரு பதக்கம் வென்றதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். உங்களது சிறப்பான செயல்பாட்டுக்காக எனது இதயபூர்வமான வாழ்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வெல்லும் விளையாட்டு வீரர்களுக்கு ஜெயலலிதா அறிவித்த உயர் பரிசு தொகையான ரூ.30 லட்சத்தை பெற நீங்கள் தகுதி பெற்றுள்ளீர்கள். தமிழக மக்கள் சார்பாக மீண்டும் ஒரு முறை தங்களுக்கும், தங்களது வெற்றிக்கு ஆதரவாக இருந்தவர்களுக்கும் பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close