இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையே முதல் ஒருநாள் போட்டி: நாளை தொடக்கம்

  Newstm Desk   | Last Modified : 20 Oct, 2018 02:31 pm
india-vs-west-indies-1st-odi-in-guwahati

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. முன்னதாக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

இதைத்தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையேயான 5 ஒருநாள் போட்டி தொடர் நாளை தொடங்க உள்ளது. முதல் போட்டி நாளை கவுகாத்தியில் நடக்கிறது. விராட்கோலி தலைமையிலான இந்திய அணி ஒருநாள் தொடரையும் கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. 

இந்தியாவை பொறுத்தவரை ரோகித் சர்மா, ஷிகர் தவான், அம்பதி ராயுடு, லோகேஷ் ராகுல், மனீஷ் பாண்டே, டோனி, ரி‌ஷப் பண்ட் போன்ற அதிரடி ஆட்டக்காரர்கள் உள்ளனர்.  பந்து வீச்சில் முகமது சமி, குல்தீப் யாதவ், சாகல், ரவீந்திர ஜடேஜா, உமேஷ் யாதவ், கலீல்அகமது ஆகியோர் உள்ளனர்.

அதே நேரத்தில் டெஸ்ட் தொடரை கைப்பற்றத் தவறிய வெஸ்ட்இண்டீஸ் அணி ஒருநாள் போட்டி தொடரை கைப்பற்றும் முனைப்பில் தீவிரம் காட்டும். இதனால் இரு அணிகளுக்கு இடையே மோதல் என்பது நிலவும். இப்போட்டி நாளை பிற்பகல் 2.30 மணிக்கு கவுகாத்தியில் தொடங்குகிறது.

இந்தியா: விராட்கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, ஷிகர் தவான், அம்பதி ராயுடு, லோகேஷ் ராகுல், டோனி, ரி‌ஷப் பண்ட், மனீஷ்பாண்டே, குல்தீப் யாதவ், சாதல், முகமது சமி, உமேஷ் யாதவ், ஜடேஜா, கலீல் அகமது.

வெஸ்ட்இண்டீஸ்: ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), ஷாய் ஹோப், சுனில் அம்ரீஸ், சாமுவேல்ஸ், லீவீஸ், ஹெட்டிமயர், சந்தர்பால், ஹேம்ராஜ், ஆலன், பிஷூ, ஜோசப், நர்ஸ், கீமோபவுல், ரோவன் பாடுவல், கேமர் ரோச், தாமஸ்

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close