தீபாவளி வாழ்த்துகள் தமிழ் உறவுகளே! - மீண்டும் அசத்திய ஹர்பஜன்!

  Newstm Desk   | Last Modified : 06 Nov, 2018 03:35 pm
harbhajan-singh-wishes-for-diwali

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், வழக்கம் போல் தமிழ் மொழியில் ட்வீட் செய்து தமிழக மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

கடந்த ஐ.பி.எல் போட்டியின் போது சென்னைக்கே உரித்தான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றிருந்தார் ஹர்பஜன் சிங். இவர் ஐ.பி.எல் போட்டி முதலே, தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் ட்வீட் செய்து தமிழ் ரசிகர்களை ஆச்சரியமடையச் செய்தவர். அவரது தமிழ் ட்வீட்டுக்கே ஒரு ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது என்றே கூறலாம். 

கடந்த ஆயுதபூஜை பண்டிகையின்போதும் தமிழில் ட்வீட் செய்து அசத்திய ஹர்பஜன், தற்போது தீபாவளிக்கும் தமிழில் வாழ்த்து ட்வீட் செய்துள்ளார். 

அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், " திருநாள் வாழ்த்துகள் தமிழ் உறவுகளே. புத்தாடையுடன் புன்னகையும் இனிப்புடன் மகிழ்ச்சியும் பரிமாறும் முன்னே சரவெடியோடு ஆரம்பமாகும் ஆனந்தம்.செந்தமிழ் தரணியெங்கும் செழிக்கட்டும்,சர்க்கரை தமிழோடு இளைய தளபதி படமும் சேர்ந்தே ஒலிக்கட்டும் " என குறிப்பிட்டுள்ளார்.

 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close