'வெளிநாட்டு பேட்ஸ்மேன் பிடித்தால் அந்த நாட்டுக்கு செல்லுங்கள்'- விராட் கருத்துக்கு நெட்டிசன்கள் அதிருப்தி 

  Padmapriya   | Last Modified : 08 Nov, 2018 12:29 pm
don-t-live-in-india-if-you-love-batsmen-from-other-countries-virat-kohli-responds-to-fan

இந்திய பேட்ஸ்மேன்கள் விளையாடுவதைக் காட்டிலும் பிரிட்டன், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் விளையாடுவதை பார்க்கலாம். அவர்களே சிறந்தவர்கள் என கிரிக்கெட் ரசிகர் ஒருவர் சொன்னக் கருத்துக்கு, 'வெளிநாட்டு பேட்ஸ்மேன்கள் பிடித்தால் அந்த நாட்டுக்கே செல்லுங்கள்' என இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி கூறியது நெட்டிசன்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

ஒருநாள் போட்டிகளில் 10,000 ரன்களைக் கடந்து சச்சினுக்கு டஃப் பைட் கொடுத்து வருகிபவர் விராட். இந்திய கிரிக்கெட் ஜாம்பவனாக உருவெடுத்துவரும் விராட் கோலி, தனது பிறந்தநாளை நேற்று முன்தினம் கொண்டாடினார்.  தனது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுடன் கலந்துரையாட ஒரு ஆப் ஒன்றையும் அவர் வெளியிட்டார். அந்த ஆப்-ல் அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை பகிர்ந்தும் கருத்துக்களை தெரிவித்தும் வந்தனர். ரசிகர்களின் கேள்விகளுக்கும் வாழ்த்துகளுக்கும் பதில் அழைக்கும் வகையில் விராட், வீடியோ நேரலையில் ஆப்-ல் தோன்றி பிரத்யேகமாக ஒவ்வொரு ரசிகர்களிடமும் பேசினார்.  

அப்போது அவர் பேசுகையில், ''ஒரு ரசிகர் என்னிடம் ஒரு கேள்வியை கேட்டிருக்கிறார். அதில், விராட் கோலி மீது அளவுக்கு அதிகமான நம்பிக்கையும், நல்ல எண்ணமும் ரசிகர்கள் வைத்திருக்கிறார்கள். எனக்குத் தெரிந்து அவரிடம் அப்படி ஒன்றும் சிறப்பான பேட்டிங் திறமை இருப்பதாகத் தெரியவில்லை. நான் இந்திய பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்வதை ரசிப்பதைக் காட்டிலும், இங்கிலாந்து, ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் பேட் செய்வதை விரும்பிப் பார்க்கிறேன் என்று அந்த ரசிகர் தெரிவித்துள்ளார்.

இதற்கு நான் அவரிடம் கூறவேண்டிய பதில் என்னவென்றால், இப்படி கருத்தைக் கூறிய அந்த ரசிகர் இந்தியாவில் வாழ வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. இந்தியாவை விட்டு அவர் வெளியேறி, வேறு ஏதாவது நாடுகளில் வசிக்கலாம், அங்கு வாழலாம். எதற்காக மற்ற நாடுகளை விரும்பிக்கொண்டும் நேசித்தை அங்கு காட்டிக்கொண்டும் இந்தியாவில் அந்த ரசிகர் வாழ வேண்டும்?. ..

நீங்கள் என்னைப் பிடிக்கவில்லை என்று கூறியதற்காக நான் கவலைப்படவில்லை, அதனால் இப்படி நான் பேச நினைக்கவில்லை. மற்ற நாடுகளை விரும்புகிற நீங்கள், இந்தியாவில் வசிக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. உங்களுடைய முன்னுரிமை எதுவோ, அதற்கே முக்கியத்துவம் தாருங்களேன்'' என்று விராட் கோலி பதில் அளித்துள்ளார்.

இந்த வீடியோ கருத்து தற்போது சார்ச்சையாகி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. நெட்டிச்சன்கள் பலரும் விராட்டின் கருத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சிலர் அந்த ரசிகரை எதிர்த்து கோலிக்கு ஆதரவாகவும் பேசி வருகின்றனர். 

சிலர், விராட் கோலி இதற்கு முன் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு பிடித்தென் ஆப்பிரிக்காவின் தொடக்க பேட்ஸ்மேன் ஹெர்ஷல் கிப்ஸ் என்று குறிப்பிட்டதை நினைவுகூர்ந்து விமர்சித்து வருகின்றனர். இதனால் விராட் கோலி மீதான நெட்டிசன்களின் விவாதம் சூடாக இணையத்தில் வளம் வருகிறது. 

Newstm.in 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close