டி20 போட்டியில் முதல் சதம் அடித்து சாதனை படைத்த ஹர்மன்பிரீத் கவுர்!

  Newstm Desk   | Last Modified : 10 Nov, 2018 12:44 pm

icc-women-s-world-t20-harmanpreet-kaur-becomes-first

நேற்று நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சதமடித்ததன் மூலமாக டி20 போட்டியில் முதல் சதம் அடித்த இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றார் ஹர்மன்பிரீத்கவுர்.

வெஸ்ட் இண்டீசில் நேற்று தொடங்கிய மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி முதல் ஆட்டத்திலேயே இந்தியா தனது வெற்றியை பதிவு செய்துள்ளது. மகளிருக்கான ஆறாவது டி 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நேற்று தொடங்கியது.

இதில் முதல் போட்டியில், ‘பி’ பிரிவில் உள்ள இந்திய அணியும் நியூசிலாந்து அணியும் மோதின. கயானாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில், டாஸ் வென்ற இந்திய மகளிரணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. 20 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் குவித்தது. . டி20 உலக கோப்பையில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். அடுத்ததாக களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 160 ரன்களே எடுத்தது. இதன்மூலம் இந்தியா 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இதில் அதிரடியாக விளையாடிய ஹர்மன்பிரீத்கவுர் 51 பந்தில் 8 சிக்ஸர், 7 பவுண்டரி உள்பட 103 ரன்கள் குவித்தார். இதன்மூலம் டி20 போட்டியில் முதல் சதம் அடித்த இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றார் ஹர்மன்பிரீத்கவுர். மேலும்,  சர்வதேச அளவில் டி20 போட்டியில் சதமடித்த 3வது வீராங்கனை என்ற பட்டத்தை பெற்றார். 

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.