6வது தங்கம்; உலக சாதனை படைத்தார் மேரி கோம்!

  Newstm Desk   | Last Modified : 24 Nov, 2018 05:00 pm
mary-kom-wins-record-6th-gold

பெண்களுக்கான சர்வதேச குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய நட்சத்திர வீராங்கனை மேரி கோம், 6வது முறையாக தங்கப்பதக்கம் வென்று உலக சாதனை படைத்துள்ளார்.

இந்தியாவில் நடைபெற்று வரும் சர்வதேச பெண்கள் குத்துசண்டை உலக சாம்பியன்ஷிப் தொடரில், பிளைவெயிட் பிரிவின் இறுதிப் போட்டியில் மேரி கோமுடன் உக்ரைன் நாட்டின் ஹனா ஒகோட்டா மோதினார். சிறப்பாக விளையாடிய மேரி கோம், முழு ஆதிக்கம் செலுத்தி ஒகோட்டாவை வீழ்த்தினார். 5-0 என ஒருமனதாக கோம் வென்றதாக நடுவர்கள் தெரிவித்தனர்.

சர்வதேச பெண்கள் குத்துசண்டை சாம்பியன்ஷிப்பில், இதற்கு முன்னர் ஐந்து முறை தங்கப்பதக்கம் வென்ற மேரிகோம் சரித்திரத்திலேயே அதிக தங்கப்பதக்கம் வென்ற சாதனையை படைத்துள்ளார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close