மேரி கோம் சாதனைக்கு மோடி வாழ்த்து

  shriram   | Last Modified : 24 Nov, 2018 06:57 pm
pm-modi-wishes-mary-kom-on-historic-achievement

சர்வதேச பெண்கள் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரின் பிளைவெயிட் பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்ற இந்திய வீராங்கனை மேரி கோமுக்கு பிரதமர் நரேந்திர மோடி, தனது வாழ்த்துக்களை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

உலகின் மிகப்பெரிய பெண்கள் குத்துசண்டை தொடரான AIBA சர்வதேச சாம்பியன்ஷிப் தொடரில், இந்திய வீராங்கனை மேரி கோம் இறுதிப்போட்டியில் இன்று உக்ரைன் நாட்டை சேர்ந்த ஹனா ஒகோட்டேவுடனே மோதினார். தொடர் முழுவதுமே அசத்தலாக விளையாடி வந்த மேரி கோம், இறுதிப் போட்டியிலும் முழு ஆதிக்கம் செலுத்தி 5-0 என சூப்பர் வெற்றி பெற்றார். ஏற்கனவே 48 கிலோ பிளைவெயிட் எடைப்பிரிவில், 5 முறை தங்கப்பதக்கம் வென்ற மேரி கோம், ஆறாவது முறையாக தங்கம் பதக்கம் வென்றதோடு, சர்வதேச அளவில் அதிக தங்கப்பதக்கம் வென்ற வீராங்கனை என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

கோமின் இந்த சாதனைக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். "இந்திய விளையாட்டு துறைக்கு மிகவும் கௌரவமான நாள் இது. பெண்கள் உலகக் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் தங்கப்பதக்கம் வென்ற மேரிகோமுக்கு எனது வாழ்த்துக்கள். அவர் விளையாட்டை எதிர்கொண்ட விதமும், உலக அளவில் முன்னணியில் இருப்பதும் மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமையும். அவரது வெற்றி மிகவும் விசேஷமானது" என எழுதியுள்ளார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close