கழற்றி விட்ட சாக்ஷி; கைகொடுத்த பாண்ட்யா - வைரலாகும் தோனி வீடியோ!

  Newstm Desk   | Last Modified : 02 Dec, 2018 03:53 pm
ms-dhoni-asks-hardik-pandya-to-take-his-hand-as-sakshi-moves-out-of-frame-at-deepveer-reception

பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிகை தீபிகா படுகோன் தம்பதியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஏராளமான பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்றனர். தோனி - சாக்ஷி மற்றும் பாண்ட்யா இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் விராட் -அனுஷ்கா திருமணம் நடைபெற்றது. அவர்களது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது அனைவரும் அறிந்ததே. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அவர்களது திருமண புகைப்படங்களை பார்த்து அலாகித்தவர்கள் அதிகம். 

அந்த வரிசையில் இந்த வருடம் ரன்வீர் - தீபிகா ஜோடி தான் வைரல். பாலிவுட்டில் சிறந்த நடிப்புத்திறமையால் கோலோச்சி வரும் இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துள்ளனர். இருவருக்கும் கடந்த மாதம் 14ம் தேதி இத்தாலியில் திருமணம் நடைபெற்ற நிலையில், நேற்று மும்பையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஒட்டுமொத்த பாலிவுட் திரையுலகமே கலந்து கொண்டது. அமிதாப் பச்சன், ஷாருக்கான், ஹிரித்திக் ரோஷன், அனுஷ்கா ஷர்மா, கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், தோனி, ஹர்திக் பாண்டியா என பல்வேறு நட்சத்திரங்கள் வருகை தந்தனர். இதனால் ஒரு தீபிகா- ரன்வீர் வரவேற்பு நிகழ்ச்சி வெகு சிறப்பாக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

மேலும், இந்த நிகழ்ச்சியில் ஒரு சில சுவாரசியமான சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. அதில் தோனி- பாண்ட்யா புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதாவது தோனி - சாக்ஷி மற்றும் பாண்ட்யா மூவரும் இணைந்து புகைப்படம் எடுத்தனர். பின்னர் சாக்ஷி மட்டும் சென்று விட பாண்ட்யா - தோனி மட்டும் கைகோர்த்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close