தமிழ்நாடு மாநில கைப்பந்து கழகத்தில் அட்ஹாக் கமிட்டி !

  டேவிட்   | Last Modified : 04 Dec, 2018 05:39 pm
tamilnadu-state-volleyball-association-s-adhoc-committee

தமிழ்நாடு மாநில கைப்பந்து கழகத்தின் நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெறாத நிலையில், கைப்பந்து வீரர், வீராங்கனைகளின் நலனைக் கருத்தில் கொண்டு 10 பேர் கொண்ட தற்காலிகக் குழு (அட்ஹாக் கமிட்டி) அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், தமிழ்நாடு மாநில கைப்பந்து கழகத்தின் பொதுக்குழுக் கூட்டம், வாசுதேவன் தலைமையில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கம் மற்றும் இந்திய கைப்பந்து சம்மேளனத்தின் பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். இந்த பொதுக்குழுக் கூட்டத்தில், தமிழ்நாடு மாநில கைப்பந்து கழகத்தின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படும் வரை, கைப்பந்து வீரர், வீராங்கனைகளின் நலனைக் கருத்தில் கொண்டு 10 பேர் கொண்ட தற்காலிகக்குழு (அட்ஹாக் கமிட்டி) அமைக்கப்பட்டு முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கமிட்டியின் சேர்மனாக பாலச்சந்திரனும், செயலாளராக பிரபாகரனும், வெங்கடபதி, நவாப்ஜான், பிரபாகரன், தனபால், தங்கபிச்சையப்பா, முகமது ஜின்னா, சர்வதேச கைப்பந்து வீரர் நடராஜன், வசீகரன் ஆகியோர் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்தக் குழு தமிழ்நாடு மாநில ஒலிம்பிக் சங்கம் மற்றும் இந்திய கைப்பந்து சம்மேளனத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close