சிட்னி டெஸ்ட்: மழையால் ரத்தான 4வது நாள் ஆட்டம் தொடங்கியது!

  Newstm Desk   | Last Modified : 06 Jan, 2019 09:18 am
sidney-match-4th-day-starts-after-rainfall

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் கடைசி டெஸ்ட் போட்டியின் நான்காவது நாளான இன்று, மழையின் காரணமாக ஆட்டம் தாமதமான நிலையில் தற்போது மழை நின்றதையடுத்து ஆட்டம் தொடங்கியுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என முன்னிலை பெற்றுள்ளது. 3 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. 

இதில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி, முதல் இன்னிங்சில் 622 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை விளையாடி வந்த ஆஸ்திரேலிய அணி, நேற்று மளமளவென விக்கெட்டுகளை இழந்தது. மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் மட்டுமே எடுத்தது ஆஸ்திரேலியா. 

விறுவிறுப்பான நான்காம் நாள் ஆட்டம் மழையின் காரணமாக தாமதமானது. இந்நிலையில் தற்போது மழை நின்றதையடுத்து, ஆட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தற்போது ஆஸ்திரேலியா 96.3 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் எடுத்துள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close