சிட்னி 4வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா 300 ரன்களில் ஆல் அவுட்!

  Newstm Desk   | Last Modified : 06 Jan, 2019 10:00 am

sidney-match-4th-day-australia-all-out-for-300-runs-in-1st-innings

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் கடைசி டெஸ்ட் போட்டியின் நான்காவது நாளான இன்று, முதல் இன்னிங்ஸ் முடிவில் ஆஸ்திரேலியா 300 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி 'பாலோ ஆன்' ஆனது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என முன்னிலை வகித்து வருகிறது. 3 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் கடைசி டெஸ்ட் போட்டி இன்று சிட்னியில் நடைபெற்று வருகிறது. 

இதில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி, முதல் இன்னிங்சில் 622 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை விளையாடி வந்த ஆஸ்திரேலிய அணி மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. 

விறுவிறுப்பான நான்காம் நாள் ஆட்டம் மழையின் காரணமாகதாமதாகவே தொடங்கியது. இந்நிலையில், தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 300 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி 'பாலோ ஆன்' ஆனது. இதன்மூலம் தற்போது 322 ரன்கள் பின்தங்கியுள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணி தனது 2வது இன்னிங்சை தொடங்கியுள்ளது.

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.