ப்ரீத்தி ஜிந்தாவை கலாய்த்த கிரிக்கெட் ரசிகர்கள்!

  Newstm Desk   | Last Modified : 08 Jan, 2019 03:44 pm
preity-zinta-commits-social-media-gaffe-while-congratulating-virat-kohli-and-co

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனைப் படைத்துள்ள இந்திய அணிக்கு, பிரபல நடிகை ப்ரீத்தி ஜிந்தா, டுவிட்டரில் தனது வாழ்த்து செய்தியை தவறாக பதிவிட்டதால், கிரிக்கெட் ரசிகர்களின் கேலி பேச்சுக்கு ஆளானார்.

இந்திய அணியை வாழ்த்தி, ப்ரீத்தி ஜிந்தா டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் " டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்" எனத் தெரிவித்திருந்தார். மேலும், இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் ஆடையின் நிறத்தை வைத்து, "இந்த வெற்றிக்கு காரணமாக நீல சட்டை பையன்களுக்கு வாழ்த்துக்கள்" எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

இதில் "டெஸ்ட் தொடர்" என்பதற்கு பதிலாக "டெஸ்ட் போட்டி" என ப்ரீத்தி ஜிந்தா குறிப்பிட்டிருந்ததை தவறென சுட்டிக்காட்டி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் ஏற்கெனவே நாம் பலமுறை வென்றுள்ளோம். தற்போது டெஸ்ட் தொடரையே வென்று சாதனைப் படைத்துள்ளோம்.

அத்துடன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர்கள் நீல சட்டை அணிவதில்லை. மாறாக எல்லா அணி வீரர்களும் வெள்ளை சட்டைதான் அணிந்து விளையாடுவார்கள்.

ஐபிஎல் போட்டிக்கான ஒரு அணியின் உரிமையாளராக இருக்கும் நீங்களே இப்படி தவறாக பதிவிடலாமா?" எனக் கேட்டு, கிரிக்கெட் ரசிகர்கள் அவரை ட்விட்டரில் கேலியாக பேச தொடங்கினர்.  

இதையடுத்து, குறிப்பிட்ட அந்தப் பதிவு, ப்ரீத்தி ஜிந்தாவின் ட்விட்டர் பக்கத்திலிருந்து நீக்கப்பட்டுவிட்டது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close