இந்திய அணி வீரர்களுக்கு தலா ரூ.15 லட்சம் அறிவிப்பு! - பிசிசிஐ

  Newstm Desk   | Last Modified : 08 Jan, 2019 04:47 pm
team-india-members-awarded-bonus-after-australia-series-win

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய விராட் கோலி தலைமையிலான இந்திய அணிக்கு, பிசிசிஐ பரிசுத் தொகைகளை அறிவித்துள்ளது. 

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, மூன்று டி-20, நான்கு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி-20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது. 

அடுத்து நடந்த டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றி 72 ஆண்டு காலம் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்த ஒரு சாதனையை படைத்துள்ளது. ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை கைப்பற்றிய முதல் ஆசிய அணி என்ற பெருமையை பெற்றுள்ளது. 

இதையடுத்து இந்திய அணிக்கு பிசிசிஐ இன்று பரிசுத்தொகைகளை அறிவித்துள்ளது. அணியில் இடம்பெற்ற 11 வீரர்களுக்கு தலா ரூ.15 லட்சமும், மாற்று வீரர்களுக்கு ரூ.7.5 லட்சமும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோன்று பயிற்சியாளர்களுக்கு தலா ரூ.25 லட்சம் வழங்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. 

newstm.in

72 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸி. மண்ணில் சாதனை படைத்த இந்திய அணி!

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close