"பேபி சிட்டர்" ரிஷப் பண்ட்டை கலாய்த்த ரோகித் சர்மா...!

  Newstm Desk   | Last Modified : 09 Jan, 2019 03:32 pm
rohit-sharma-asks-rishabh-pant-to-babysit-his-daughter

பண்ட்டை கலாய்த்து ரோகித் சர்மா ட்விட்டரில் பதிவிட்டுள்ளது வைரலாகி வருகிறது. 

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான டெஸ்ட் தொடரின் போது இரு அணி வீரர்களுக்கு மாறி மாறி ஸ்லெட்சிங் செய்து கொண்டனர். அப்போது தோனி மீண்டும் டி20 அணிக்கு வந்து விட்டதால் ரிஷப் பண்ட்டை 'பேபிசிட்' செய்ய வாருங்கள் என ஆஸ்திரேலிய அணி கேப்டன் டிம் பெய்ன் கூறியிருந்தார். 

இது சமூக வலைதளத்தில் பேசு பொருளானது. மேலும் டிம் பெய்ன்னின் மனைவி போனி பெய்னும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரிஷப் தனது குழந்தையுடன் இருக்கும படத்தை பதிவிட்டு சிறந்த பேபிசிட்டர் என பதிவிட்டார். இதுவும் இணையத்தில் வைரலானது. 

இந்நிலையில் மகள் பிறந்த சந்தோஷத்தில் இருக்கும் இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரோகித் சர்மா, தனது ட்விட்டர் பக்கத்தில் ரிஷப் பண்ட்டை கிண்டல் செய்துள்ளார். 

அதில், "நீங்கள் தான் சிறந்த பேபி சிட்டர் என்று கேள்விப்பட்டேன். இப்போது எங்களுக்கு ஒருவர் தேவை. நீங்கள் வந்தால் ரித்திகா(ரோகித்தின் மனைவி) சந்தோஷப்படுவார்" என்று பதிவிட்டுள்ளார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close