ரஜினியின் அரசியலை கலாய்த்த முத்தையா முரளிதரன்!

  Newstm Desk   | Last Modified : 11 Jan, 2019 10:37 am
cricketer-muralitharan-trolls-rajinikanth

ரஜினிகாந்த் போல அரசியலுக்கு வருவேனா மாட்டேனா என்ற குழப்பம் எல்லாம் தனக்கு இல்லை என்றும், அரசியலுக்கு வர மாட்டேன் என்றும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட  அவரிடம், அரசியலுக்கு வருவீர்களா?  மாட்டீர்களா? எனக் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த முரளிதரன் " அரசியல் குறித்து ரஜினிகாந்த்தை போல  நான் குழப்பத்தில் இல்லை. நான் அரசியலுக்கு வரவேமாட்டேன். நான் செய்வது அரசியல் அல்ல, சேவை. அது எனக்கு பிடித்திருக்கிறது. மக்களுடைய தேவைகளை அடையாளம் கண்டு அவர்களின் திறமைகளை நிறைவேற்றுவதற்காக தொடர்ந்து நான் பணியாற்றுவேன்” என்றார். 

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close