காதலியுடன் எடுத்த செல்பியை பகிர்ந்துள்ள ரிஷப் பண்ட்!

  Newstm Desk   | Last Modified : 17 Jan, 2019 04:18 pm
rishabh-pant-shares-picture-with-his-girlfriend

இந்திய அணியின் சிறந்த எண்டர்டெயினராக திகழும் இளம் வீரர் ரிஷப் பண்ட் தனது காதலி இஷா நெகியுடன் எடுத்துக்கொண்ட செல்பியை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். 

தொடர்ந்து அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி கவனம் ஈர்த்து வருகிறார் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட். தோனிக்கு மாற்றாக கருதப்படும் இவர் கிரிக்கெட் மட்டுமின்றி பல விஷயங்களில் லைம்லைட்டிலேயே இருக்கிறார். 

குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் தொடரில் அந்த அணியின் கேப்டன் டிம் பெய்னை இவர் கலாயத்தது கடந்த வாரம் இணையத்தின் ஹிட் டாபிக். 

21 வயதான இளம் வீரர் ரிஷப் தற்போது மீண்டும் டிரெண்டாகி வருகிறார். காரணம அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம். அவர் தனது காதலி இஷா நெகியுடன் எடுத்த செல்பியை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "உன்னை மகிழ்விக்க என்ன வேண்டும் என்றாலும் நான் செய்வேன், ஏனெனில் நீ என்னை மகிழ்விக்கிறாய்" என பதிவிட்டுள்ளார். 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

I just want to make you happy because you are the reason I am so happy ❤️

A post shared by Rishabh Pant (@rishabpant) on

 

தற்போது ஒருநாள் போட்டிகளில்  இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் இவர் தனது காதலியுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close