கோவா: தேசிய விளையாட்டுப் போட்டி ஒத்திவைப்பு..!

  டேவிட்   | Last Modified : 29 Jan, 2019 11:55 pm
goa-2019-national-games-postponed

கோவாவில் வரும் மார்ச் மாதம் தொடங்கவிருந்த தேசிய விளையாட்டுப் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது. 

36வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் கோவாவில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்படிருந்தது.  முன்னதாக இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள், மத்திய விளையாட்டு அமைச்சகத்துடன் நடத்திய ஆலோசனையில் மார்ச், ஏப்ரல் மாதத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் மற்றும் பள்ளி மாணவர்களின் தேர்வுகள் நடைபெறவுள்ளதாலும் தேசிய விளையாட்டுப் போட்டிகளை ஒத்தி வைக்க ஆலோசிக்கப்பட்டது. 

இதனிடையே, நேற்று (ஜன.29) போட்டி தொழில்நுட்ப கமிட்டியின் கூட்டம் நடைபெற்றது. இதில்,  தேசிய விளையாட்டு போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், மத்திய விளையாட்டு அமைச்சக ஆலோசனைப்படி புதிய தேதிகள் அறிவிக்கப்படும் எனவும் கமிட்டி சேர்மன் முகேஷ் குமார் தெரிவித்தார்.  மேலும் வரும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இது அடுத்த மாதம் உறுதி செய்யப்படும் எனவும் முகேஷ் குமார் தெரிவித்துள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close