தோனி இஸ் பேக்..! வைரலாகும் புகைப்படம்..! #MSDhoni

  முத்துமாரி   | Last Modified : 30 Jan, 2019 04:08 pm
ms-dhoni-back-in-nets-after-hamstring-injury-as-india-gear-up-for-4th-odi-vs-new-zealand

நியூசிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் காயம் காரணமாக பங்கேற்காத தோனி, 4வது ஒருநாள் போட்டியில் பங்கேற்பது உறுதியாகியுள்ளது. அவர் வலைப்பயிற்சியில் ஈடுபட்ட வீடியோ ஒன்று இன்று வைரலாகி வருகிறது. 

இந்திய அணி நியூசிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணிக்கு எதிராக 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த 3 ஒருநாள் போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு பிறகு நியூசிலாந்து மண்ணில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. 

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி, நியூசிலாந்துக்கு எதிரானமுதல் 2 போட்டிகளில் விளையாடிய நிலையில், தொடைப்பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக 3வது ஒருநாள் போட்டியில் இருந்து விலகினார். 

நமது இந்திய அணி வீரர்களில் வயது மூத்தவரானாலும், சிறந்த உடற்தகுதி கொண்டிருப்பவர் மகேந்திர சிங் தோனி. கடந்த 2004ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமானதில் இருந்து இதுவரை காயம் காரணமாக போட்டியில் பங்கேற்காமல் இருப்பது தோனி விஷயத்தில் அரிதான ஒன்று. 

கடந்த 15 ஆண்டுகளில் இதுவரை 3 முறை(நியூசிலாந்து போட்டியும் சேர்த்து) மட்டுமே தோனி காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகியுள்ளார். 

இந்நிலையில், நாளை ஹாமில்டனில் நடக்கவிருக்கும் 4வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் தோனியும் இடம்பெறுகிறார் என்பது உறுதியாகியுள்ளது. அவர் இன்று வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ள புகைப்படத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ள  நிலையில், அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. 

மேலும், ஷிகர் தவான், ஹர்திக் பாண்டியா உள்ளிட்டோர் பயிற்சியில் ஈடுபட்ட புகைப்படத்தையும் பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close