ராமநாதபுரம்: மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி

  டேவிட்   | Last Modified : 30 Jan, 2019 07:17 pm
ramanathapuram-district-level-sports-meet

ராமநாதபுரம் முகமது சதக் தஸ்தகீர் கல்வியியல் கல்லூரியில் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைகழகத்தின்  சார்பில் மாவட்ட அளவிலான கல்லூரிகளுக்கிடையே விளையாட்டு மற்றும் கலை போட்டிகள் நடைபெற்றது.

ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள முகம்மது சதக் தஸ்தகீர் கல்வியியல் கல்லுாரியில் இரண்டு நாட்கள் நடைபெற்ற தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை கழகத்தின் சார்பில் மாவட்ட அளவிலான விளையாட்டு மற்றும் கலை போட்டிகளில் 8 கல்வியியல் கல்லுாரிகளை சார்ந்த 175 மாணவ, மாணவிகள் போட்டிகளில் கலந்து கொண்டனர்.  

கலை நிகழ்ச்சியில் நாட்டுப்புற பாடல் பாடியதில் மாணவிகளும் மாணவர்களும் அற்புதமாக பாடி அசத்தினர். மேலும் விளையாட்டு போட்டிகளில்  100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், 800 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் போன்ற போட்டிகள் நடைபெற்றது. இதில்  மாவட்ட அளவில் ஆண்கள் பிரிவில் கற்பகவிநாயகர் கல்வியல் கல்லூரியும்,  பெண்கள் பிரிவில் முகமது சதக் கல்வியியல் கல்லூரியும்  முதல் இடத்தைக் கைப்பற்றின. கலைப் போட்டியில் நாட்டுப்புறப்பாடல்களும் நடனமும் நடைபெற்றது. முன்னதாக இசைக்கல்லூரி ஆசிரியர்களின் நாதஸ்வர நிகழ்ச்சியும் நடைபெற்றது.

 இந்நிகழ்ச்சியில் முகம்மது சதக் அறக்கட்டளை தலைவர் மற்றும் தாளாளர் முகமது யூசுப் செயலாளர் மற்றும் இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.  ஏராளமான ஆசிரியர்கள், ஆசிரியைகள் , ஆசிரியர் பயிற்சி பள்ளி மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close