ஹர்த்திக் பாண்டியா, ராகுல் மீது வழக்குப் பதிவு!

  Newstm Desk   | Last Modified : 06 Feb, 2019 09:18 am
jodhpur-police-case-filed-against-hardik-rahul

இந்திய கிரிக்கெட் வீரர்களானஹர்த்திக் பாண்டியா மற்றும் கே.எல்.ராகுல் மீது ஜோத்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

பாலிவுட் இயக்குநர் கரண் ஜோகர் தொகுத்து வழங்கிய "காஃபி வித் கரண்" என்ற தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற ஹர்த்திக் பாண்டியா மற்றும் கே.எல்.ராகுல், பெண்களை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தனர்.

இவர்களின் கருத்துக்கு பலர் கண்டனம்  தெரிவித்தனர். இது தொடர்பாக கிரிக்கெட் வாரியமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. 

இதையடுத்து, தன்னுடைய பேச்சுக்கு ஹர்த்திக் பாண்டியா மன்னிப்பு கோரினார். எனினும் இருவர் மீதும் கிரிக்கெட் வாரியம் இடைக்கால தடை விதித்தது. பின்னர் இடைக்காலத் தடையை நீக்குவதாக கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

இந்நிலையில், பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததற்காக ஹர்த்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் ஆகியோர் மீது ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பாலிவுட் இயக்குநர் கரண் ஜோகர் மீதும் ஏற்கெனவே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close