இந்தியா Vs நியூசிலாந்து முதல் டி20 கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது!

  Newstm Desk   | Last Modified : 06 Feb, 2019 11:01 am
india-vs-new-zealand-1st-t20-today

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. 

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அந்நாட்டு அணியுடன் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது.  

முன்னதாக, 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 4-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது. இதைத்தொடர்ந்து தற்போது 3 டி20 போட்டிகளில் முதல் போட்டி இன்று நியூசிலாந்து வெலிங்டன் வெஸ்ட்பேக் ஸ்டேடியத்தில் தொடங்கவுள்ளது. இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 12.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

விராட் கோலி ஓய்வில் இருப்பதால் பெறுவதால், ரோஹித் ஷர்மா அணிக்கு தலைமை தாங்குகிறார். தோனியும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். 

கடந்த 2008-2009ம் ஆண்டு போட்டியில் நியூசிலாந்து அணி தொடரை கைப்பற்றியது. இதுவரை இந்திய அணிக்கு எதிரான 8 டி20 போட்டிகளில் நியூசிலாந்து அணி 6 போட்டிகளில் வென்றுள்ளது. 

ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியதால் டி20 தொடரை கைப்பற்ற நியூசிலாந்து அணி முனைப்பில் இருக்கும். எனவே டி20 போட்டிகளில் விறுவிறுப்பாகவே நடைபெறும் என்று தெரிவிக்கப்படுகிறது. 

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close