உருவாகிறது சானியா மிர்சா பயோபிக்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

  Newstm Desk   | Last Modified : 09 Feb, 2019 12:26 pm
sania-mirza-confirms-her-biopic

இந்திய சினிமாவில் தொடர்ந்து பல பிரபலங்களின் பயோபிக் உருவாகி வரும் நிலையில் தற்போது இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் வாழ்க்கை திரைப்படமாக உருவாக இருக்கிறது என்ற  அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துள்ளது. 

கிரிக்கெட் வீரர்கள் சச்சின், தோனி, மேரி கோம் உள்ளிட்டோரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அந்த வரிசையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரபல பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், துப்பாக்கிச் சுடும் வீரர் அபினவ் பிந்த்ரா, மகளிர் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜின் பயோபிக் திரைப்படங்களும் உருவாகி வருகிறது. இந்நிலையில், கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற ஒரே இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் வாழ்க்கை வரலாறும் திரைப்படமாகவுள்ளது.

இது குறித்த அறிவிப்பை சானியா மிர்சா பேட்டி ஒன்றில் வெளியிட்டுள்ளார். சானியா மிர்சா பயோபிக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இது. தற்போது ஆரம்பக்கட்ட பணிகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை ரோனி ஸ்குருவாலா உருவாக்கவுள்ளார். அவரது தயாரிப்பு நிறுவனத்துடன் சானியா ஒப்பந்தம் செய்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close