திருவிழா போன்று கோலாகலத்துடன் தொடங்கிய ஐ.பி.எல் டிக்கெட் விற்பனை!

  Newstm Desk   | Last Modified : 16 Mar, 2019 12:14 pm
ticket-sale-starts-today-in-chepauk-stadium-for-ipl

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சி மைதானத்தில் மார்ச் 23ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் - பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் இடையே நடைபெறும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியுள்ளது. 

12வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வருகிற மார்ச் 23ம் தேதி தொடங்குகிறது. இந்தாண்டின் முதல் போட்டியே சென்னையில் நடைபெறுகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. 

இந்நிலையில் இதற்கான டிக்கெட் விற்பனை வருகிற 16ம் தேதி  காலை 11.30 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் சற்றுமுன் விற்பனை தொடங்கியுள்ளது. அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனை ஆகும் வரை டிக்கெட் விற்பனை நடைபெறும். 

C, D மற்றும் E கீழ்பகுதி-ரூ.1300, C மற்றும் E மேல் பகுதி ரூ.2500, விருந்தினர் டிக்கெட்டுகள்-ரூ.5000, ரூ. 6,500 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2019 மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், 12வது ஐபிஎல் தொடருக்கான முழு அட்டவணை இன்னும் வெளியாகவில்லை. முதல் இரண்டு வாரத்திற்கான அட்டவணை மட்டும் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close