தரவரிசையில் முன்னேறிய இந்திய டென்னிஸ் வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன்

  Newstm Desk   | Last Modified : 19 Mar, 2019 09:23 am
prajnesh-gunneswaran-rises-to-career-high-84-post-indian-wells-run

இந்தியன் வேல்ஸ் தொடரில் சிறப்பாக விளையாடி அனைவரது கவனத்தையும் பெற்ற இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் தனது டென்னிஸ் வாழ்க்கையில் முதன்முறையாக தரவரிசையில் முன்னேறி 84வது இடத்ததை பிடித்துள்ளார். 

டென்னிஸ் ஏடிபி தரவரிசை நேற்று வெளியானது. இதில் ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் முதலிடம் பிடித்தார். ஸ்பெயினின் ரபேல் நடால் இரண்டாவது இடத்தையும், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 3வது இடத்தையும் பிடித்தனர். 

கடைசியாக நடைபெற்ற இந்தியன் வேல்ஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியாவின் டொமினிக் திம் 4வது இடத்தில் உள்ளார். அவரிடம் தோல்வியடைந்த சுவிட்சர்லாந்தின்  ரோஜர் பெடரர் 5வது இடத்தில் உள்ளார். 

இதே தொடரில்  3வது சுற்றுக்குள் நுழைந்த இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் 13 இடங்கள் ஏற்றம் கண்டு 84வது இடத்தை பிடித்துள்ளார். இது அவரது சிறந்த தரவரிசையாகும். முழங்காலில் காயம் அடைந்து தேறி வரும் இந்திய வீரர் யுகி பாம்ப்ரி 36 இடங்கள் சரிந்து 207வது இடத்தை பெற்றுள்ளார். கடந்த 2 ஆண்டுகளில் முதல்முறையாக யுகி பாம்ப்ரி டாப் 200 இடங்களுக்கு வெளியே தள்ளப்பட்டு இருக்கிறார். இந்திய வீரர்கள் ராம்குமார் ராமநாதன் 139வது இடத்தையும், சகெத் மைனெனி 251வது இடத்தையும், சசிகுமார் முகுந்த் 268வது இடத்தையும் பெற்றுள்ளனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா முதலிடத்தில் தொடருகிறார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close