ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியுள்ள கோமதி மாரிமுத்து

  ஸ்ரீதர்   | Last Modified : 22 May, 2019 01:48 pm
gomathi-marimuthu-fails-dope-test-twice

தோஹா ஆசிய தடகளப் போட்டியில் பங்கேற்று தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி, ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். 

பாட்டியாலாவில் கடந்த மார்ச் மாதம் நடந்த தடகளப் போட்டியின்போது, அவரிடத்தில் தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமை  பரிசோதனை நடத்தியது. அதில், அவர் ஊக்க மருந்து பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. 

முறைப்படி, எங்களுக்கு தகவல் அளிக்கப்படவில்லை. ஊக்கமருந்து சோதனை முடிவை தாமதமின்றி அறிவித்திருந்தால், நாங்கள் அவரை ஆசிய தடகளப் போட்டியில் பங்கேற்க அனுமதித்திருக்க  மாட்டோம் என்று இந்திய தடகள சம்மேளன அதிகாரி தெரிவித்துள்ளார்.

கோமதி ஊக்க மருந்து பயன்படுத்தியது தொடர்பாகத் தடகள சம்மேளனம் அவருக்கு இ-மெயில் அனுப்பியுள்ளதாகச் சொல்லப்படுகிறது.  தற்போது, அவர் தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பிடிஐ செய்தி நிறுனம் தெரிவித்துள்ளது.  

அடுத்தபடியாக, 'பி' மாதிரியும் பரிசோதிக்கப்படும். இந்தச் சோதனை முடிவைப் பொறுத்தே முடிவுகள் எடுக்கப்படும். கோமதி ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதிப்படுத்தப்பட்டால், ஆசிய தடகளத்தில் அவர் வென்ற தங்கம் பறிக்கப்படும். தற்போது, 30 வயதான அவர், 4 ஆண்டுகள் போட்டிகளில் பங்கேற்க முடியாது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close