மேரி கோமுக்கு பத்மவிபூஷண், சிந்துவுக்கு பத்மபூஷண் விருது பரிந்துரை

  Newstm Desk   | Last Modified : 12 Sep, 2019 01:36 pm
padmavubhushan-for-mary-kom-padmabhushan-award-for-sindhu

குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமுக்கு பத்மவிபூஷண் விருதும், பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு பத்மபூஷண் விருதும் வழங்க விளையாட்டுத்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.

மேலும், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா, கிரிக்கெட் வீராங்கனை ஹர்மன்பிரித் கவுர் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷணுக்கு பரிந்துரைக்கப்படும் முதல் வீராங்கனை மேரி கோம் ஆவார்.

விளையாட்டு துறையில் கொடுக்கப்படும் பத்ம விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்கள் அனைவரும் வீராங்கனைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close