உலக மல்யுத்த போட்டி: பைனலில் விளையாடத இந்திய வீரருக்கு வெள்ளிப்பதக்கம்

  Newstm Desk   | Last Modified : 22 Sep, 2019 03:58 pm
world-wrestling-tournament-silver-medal-for-indian-player

உலக மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் தீபக் புனியாவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது.

கஜகஸ்தானில் நடைபெற்று வரும் உலக மல்யுத்த போட்டியில், ஆடவர் 86 கிலோ பிரிவில், இன்று இந்தியாவின் தீபக் புனியா, ஈரானின் ஹாசன் யாஷ்டனி இறுதிப்போட்டியில் மோத இருந்தனர். 

இந்த நிலையில், தீபக் புனியா காயம் காரணமாக இறுதிபோட்டியில் பங்கேற்காகதால் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்றதால் அவருக்கு வெள்ளிப்பதக்கம் வழங்கப்பட்டது. தீபக் புனியா அரையிறுதியில் வென்றதன் மூலம் 2020 ஜப்பான் ஒலிம்பிக் போட்டியில் தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கம் பதக்கம் வெல்லவில்லை என்று சிறிது ஏமாற்றம் இருந்தாலும், ஒட்டுமொத்தமாக தன்னுடைய ஆட்டம் மகிழ்ச்சியை கொடுத்துள்ளதாக தீபக் புனியா தெரிவித்துள்ளார். மேலும், கடினமாக பயிற்சியை மேற்கொண்டு, ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே தனது இலக்கு என்றும் தீபக் புனியா கூறியுள்ளார்.


newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close