முதல் டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இந்திய அணி டிக்ளேர்

  அனிதா   | Last Modified : 16 Nov, 2019 09:40 am
first-test-indian-team-declare

வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 493 ரன்களை குவித்த இந்திய அணி முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. 

வங்க தேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் தொடர் இந்தூரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. இந்திய பந்துவீச்சாளர்களை தாக்குபிடிக்க முடியாமல் திணறிய வங்கதேச அணி 58.3 ஓவர்களில் 150 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனை தொடர்ந்து இந்திய அணி விளையாடியது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 493 ரன்களை குவித்து வலுவாக இருந்த நிலையில் 3ஆம் நாள் ஆட்டநேர தொடக்கத்தில் முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.  இதை தொடர்ந்து 2 இன்னிங்சில் வங்கதேச அணி பேட்டிங்கில் களமிறங்கியுள்ளது.

Newstm.in 

 

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close