விராட் - அனுஷ்கா மும்பை ரிசப்ஷன் போட்டோஸ்!

  நந்தினி   | Last Modified : 27 Dec, 2017 03:04 pm

விராட் கோலி- அனுஷ்கா சர்மா ஜோடியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி தான் தற்போது இந்தியாவின் ஹாட் டாப்பிக். நேற்று இரவு மும்பையில் இந்த புதுமண ஜோடியின் இரண்டாவது வரவேற்பு நிகழ்ச்சி, கிரிக்கெட் பிரபலங்கள், பாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் தொழிலதிபர்கள் சூழ மிகவும் கோலாகலமாக நடந்தது. நிகழ்ச்சிக்கு யாரெல்லாம் வந்து புது தம்பதிகளை வாழ்த்தினார்கள் என்று பார்ப்போம்:

பாலிவுட்டில் 'பிக் பி' என்று அழைக்கப்படும் அமிதாப் பச்சன், தன்னுடைய மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் பச்சனுடன் வந்து விராட்- அனுஷ்காவை வாழ்த்தினார்.

இந்தியாவின் நம்பர் ஒன் கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானி, மகன் ஆகாஷ் அம்பானியுடன் வருகை தந்து மணமக்களை வாழ்த்தியுள்ளார்.

பாலிவுட்டின் கிங்கான் என்று போற்றப்படும் டான் ஷாருக்கான், விராட்- அனுஷ்கா ஜோடியை வாழ்த்தியதோடு, அவர்களுடன் ஒரு டான்ஸ் போட்டு, அந்த இடத்தையே குதூகலப்படுத்திவிட்டு சென்றார்.

கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் டெண்டுல்கர், மனைவி அஞ்சலி, மகள் சாராவுடன் விழாவிற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தினார்.

அனில் கும்ப்ளேவுக்கும் கோலிக்கும் இடையே ஏற்பட்ட மோதல் ஏற்பட்டதாக கூறப்பட்டு சர்ச்சை கிளம்பியது. இந்த நிலையில், அணியின் முன்னாள் பயிற்சியாளர் கும்ப்ளே, தனது மனைவியுடன் வந்து ஜோடியை வாழ்த்தியிருக்கிறார்.

விராட் கோலி அணியின் தற்போதைய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் நிகழ்ச்சியில் பங்கேற்று, தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி, மனைவி சாக்ஷி தோனி, மகள் ஜிவா தோனியுடன் விழாவில் கலந்து கொண்டார். சமூக வலைத்தளத்தின் ட்ரெண்டிங் பேபியான ஜிவா, இந்நிகழ்ச்சி மூலம் மேலும் வைரலாகி வருகிறார்.

ரோஹித் சர்மா, தன்னுடைய காதல் மனைவி ரித்திகா சாஜ்தேஹ்வுடன் விழாவை சிறப்பித்தார்.

இந்திய அணியின் லேட்டஸ்ட் புது மாப்பிளை புவனேஸ்வர் குமார், மனைவி நுபுர் நகருடன் விழாவில் கலந்து கொண்டார்.

சிக்ஸர் மேன் யுவ்ராஜ் சிங், ஆஷிஷ் நெஹ்ரா, ஹர்பஜன் சிங் ஆகியோரும் விழாவில் பங்கேற்றனர்.

சுழல் கிங் அஷ்வின், அதிரடி துவக்க வீரர் புஜாரா, உனட்கட் நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியும் விழாவில் காணப்பட்டார்.

முன்னாள் உலக அழகி நடிகை பிரியங்கா சோப்ரா கோல்டன் புடவையில் வந்து விழாவில் கலக்கினார்.

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் மனைவியுடன் வந்து, விராட்- அனுஷ்காவை வாழ்த்தினார்.

டென்னிஸ் உலகின் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை சாய்னா நேவால், பாலிவுட் நாயகி கத்ரீனா கைப் ஆகியோரும் பார்ட்டியில் தென்பட்டனர்.

இந்திய கால்பந்து அணி வீரர் சுனில் சேத்ரி, மனைவி சோனம் பட்டாச்சார்யாவுடன் கலந்து கொண்டார்.

பாலிவுட் ஹீரோ ரன்பிர் கபூரும் நிகழ்ச்சியில் பங்கேற்று தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்

இந்திய அணி வீரர்கள் ஜடேஜா, குலதீப், சாஹல், அக்சர் ஆகியோரும் புது ஜோடியை வாழ்த்தினர்.

முன்னாள் மிஸ் யுனிவர்ஸ் லாரா தத்தா, கணவருடன் வருகை புரிந்து புது தம்பதியை வாழ்த்தினார்.

முன்னாள் அதிரடி மன்னனும் ட்விட்டர் கிங்குமான விரேந்தர் சேவாக்கும் நிகழ்ச்சிக்கு வருகை புரிந்தார்.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ், அவரது மனைவியுடன் விழாவில் பங்கேற்றார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close