ஐ.பி.எல் ஏலம் லைவ்: சென்னைக்கு அஷ்வின் இல்லை... ஹர்பஜன் கிடைத்தார்!

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 27 Jan, 2018 11:08 am

அதிக எதிர்பார்க்கப்பட்ட ஐ.பி.எல் ஏலம் இன்று தொடங்கியது. இதில், சென்னை வீரர் அஷ்வினை பஞ்சாப் வாங்கியது. சென்னை அணி வாங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அஷ்வினை பஞ்சாப் அணி கைப்பற்றிவிட்டது. சென்னைக்கு ஹர்பஜன் சிங் கிடைத்துள்ளார்.

இன்று காலை முதல் ஐ.பி.எல் ஏலம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சென்னை வீரர் அஷ்வினை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 7.60 கோடி ரூபாய்க்கு வாங்கியது. டு பிளிசிஸ்ஸை அதே அணி 1.6 கோடிக்கு வாங்கியுள்ளது.

தவானை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ரூ.5.2 கோடிக்குத் தக்க வைத்துள்ளது. ரகானேவை ரூ.4 கோடி கொடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் தக்க வைத்துள்ளது. பென் ஸ்டோக்ஸையும் ராஜஸ்தான் அணி வாங்கியுள்ளது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கிரிஸ் கெய்ல் விலைபோகவில்லை. தொடர்ந்து ஏலம் நடக்கிறது. மிட்செல் ஸ்டார்க்கை ரூ.9.4 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வாங்கியது.

பென் ஸ்டோக்கை ராஜஸ்தான் அணி ரூ.12.5 கோடிக்கு வாங்கியுள்ளது. இவருக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் விலை போய் உள்ளார். இவருக்கு அடிப்படை விலையாக ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இவரை வாங்க கிங்ஸ் லெவனும் கொல்கத்தாவும் போட்டியிட்டன. கடைசியில் ப்ரீத்தி ஜிந்தா வெற்றிபெற்றார். அவர் ரூ.9.4 கோடி கொடுத்து மிட்சல் ஸ்டார்க்கை வாங்கிவிட்டார்.

சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கை ரூ.2 கோடிக்கு வாங்கியது சென்னை. இந்த ஐ.பி.எல் ஏலத்தில் மிகவும் துடிப்பான அணியாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் இருக்கிறது. மிகவும் அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது பெங்களுரு ஆர்.சி.பி அணி.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close