டாப் விளையாட்டு வீரர்களின் சொத்து மதிப்பு தெரியுமா?

  நந்தினி   | Last Modified : 06 Feb, 2018 12:47 pm

விளையாட்டு நமக்கு சுறுசுறுப்பையும் மகிழ்ச்சியான உணர்வையும் தருகிறது. நாம் தினமும் ஓடி ஆடி விளையாடினால் ஃபிட்டான உடலையும் ஆரோக்கியத்தையும் அது நமக்குத் தரும். அதுவே, சிலருக்கு பல கோடிகளை ஈட்டித்தரும் விஷயமாகவும் இருக்கிறது. விளையாட்டில் ஒருவர் எவ்வளவு உயரத்துக்கு செல்கிறாரோ அந்த அளவுக்கு அவருக்கு கோடி கோடியாக கொட்ட தயாராக இருக்கின்றன நிறுவனங்கள். சமீபத்தில் நடந்த ஐ.பி.எல் ஏலம் இதற்கு ஒரு நல்ல உதாரணம். கடந்த ஆண்டில் கிடைத்த வருவாய் மற்றும் மொத்த சொத்த மதிப்பு அடிப்படையில் வீரர்கள் லிஸ்ட் வெளியாகி உள்ளது. இதன்படி யார் எந்த இடத்தில் இருக்கிறார்கள் என்று பார்க்கலாமா...

தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின். டாப் 5 பட்டியலில் அஷ்வின் கடைசி இடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில் ஐபிஎல் ஏலத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக 7.6 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டார். அவருடைய ஒட்டுமொத்த சொத்து மதிப்பு ரூ. 36.47 கோடி ஆகும்.

சாய்னா நெய்வால்... 2015ம் ஆண்டில் பேட்மிண்டன் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையாக இருந்தவர். இன்றைக்கும் பேட்மிண்டன் உலகின் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கிறார். சஹாரா இந்தியா பரிவார் உள்ளிட்ட பல பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் பிராண்ட் அம்பாசிட்டராக இருக்கிறார். இவரது சொத்து மதிப்பு 100 கோடி (20 மில்லியன் அமெரிக்க டாலர்) ரூபாய்க்கு மேல் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

பேட்மிண்டன் போட்டியின் லேட்டஸ்ட் சென்சேஷன் இவர். ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஒரு வீராங்கனையின் வருவாய் ஏன் நமக்கு அதிர்ச்சிதரக் கூடியதாக இருக்கக் கூடாது. அவருடைய மொத்த வருவாய் ரூ. 57.25 கோடியாக இருக்கிறது.

யு19 உலக கோப்பையை பெற்றுத் தந்ததன் மூலம் மீடியாவின் வெளிச்சம் மீண்டும் ராகுல் திராவிட் மீது விழுந்துள்ளது. அவருக்கு 50 லட்ச ரூபாய் பரிசு தொகையை பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட்டின் சுவராக விளங்கிய திராவிட் பணக்கார வீரர்கள் பட்டியலில் டாப் 10-க்குள் இடம் பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு 145 கோடிக்கு மேல் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய டென்னிஸ் உலகின் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்தவர் சானியா மிர்ஸா. விஜய் அமிர்தராஜ், லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி என்று இந்திய ஆண்களே தட்டுத்தடுமாறி சர்வதேச போட்டிகளுக்களுக்கு சென்றநிலையில், தன்னுடைய விளையாட்டுத் திறமையால் சர்வதேச போட்டிகளில் முத்திரை பதித்தார் சானியா. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்து கொண்டாலும் இந்திய மகளாகவே இருக்கிறார். அடிடாஸ், வில்சன், பெஃப்பி என பல்வேறு நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக இருக்கும் சானியாவின் சொத்து மதிப்பு 167 கோடி ரூபாய்க்கு மேலாம்.

கிரிக்கெட் விளையாட்டின் இரும்பு மனிதனாக இருப்பவர் யுவராஜ் சிங். புற்றுநோய் பாதிப்பு வந்தாலும் அனைத்தையும் தாண்டி மீண்டு வந்து வெற்றிகரமான கிரிக்கெட் வீரராகவும் இருக்கிறார். சிறந்த பேட்ஸ்மேனாக, ஃபில்டராக இருக்கும் யுவி-யின் சொத்து மதிப்பு 220 கோடிக்கு மேல்.

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன், இந்திய அணிக்கு மூன்றுவித ஐசிசி கோப்பைகளை வென்று கொடுத்த முதல் கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளவர். தோனியின் ஒட்டுமொத்த வருவாய் ரூ. 63.7 கோடி. இந்தியளவில் அதிக வருவாய் ஈட்டும் விளையாட்டு வீரர்களின் பட்டியலில் தோனி, 3-வது இடத்தில் இருக்கிறார். அதுவும் 2014ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு தோனியின் மதிப்பு இந்தளவிற்கு உயர்ந்துள்ளது. இருப்பினும் சொத்து மதிப்பு அடிப்படையில் தோனிக்கு இரண்டாவது இடம். தோனியின் சொத்து மதிப்பு 600 கோடி ரூபாய்க்கு மெல்.

சச்சின் டெண்டுல்கர்: இந்திய கிரிக்கெட் உலகின் கடவுளாக போற்றப்படும் சச்சினின் வருவாய், ரூ. 82.5 கோடியாகும். இந்தியளவில் அதிக வருவாய் ஈட்டும் வீரர்களின் பட்டியலில் சச்சின் 2-வது இடத்தில் இருக்கிறார். முதலிடத்தில் இருந்த இவரை, விராட் கோலி பின்னுக்கு தள்ளினார். இருப்பினும் சொத்து மதிப்பு அடிப்படையில் இப்போதும் சச்சின்தான் முதலிடத்தில் இருக்கிறார். அவரது சொத்து மதிப்பு ரூ.700 கோடிக்கும் மேலாம்.

இந்திய அணியின் கேப்டன் 'கிங்' கோலி. அணியில் மட்டுமில்லாமல், அனைத்திலும் கிங்காகவே இருக்கிறார் கோலி. இவருடைய மொத்த வருவாய் ரூ. 100.72 கோடி ஆகும். ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட அதிக வருவாய் ஈட்டும் 100 விளையாட்டு வீரர்களின் பட்டியலில் இடம் பிடித்த ஒரே இந்திய வீரர் விராட் தான். இப்போதுதான் வருவாய் குவிய ஆரம்பித்துள்ளது. விரைவில் பணக்கார வீரர்கள் பட்டியலில் சச்சினை பின்னுக்குத் தள்ளிவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவரது சொத்து மதிப்பு 400 கோடி ரூபாய்க்கும் மேல். அனுஷ்காவுடன் திருமணம் முடிந்தவிட்டது. இப்போது இவர்கள் சொத்து மதிப்பு எவ்வளவாக இருக்கும் என்று தெரியவில்லை.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close