ஆசிய பசிபிக் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்த விஜேந்தர் சிங்

  முத்துமாரி   | Last Modified : 24 Dec, 2017 03:06 pm


இந்திய தொழில்முறை குத்துச்சண்டை போட்டிகளில் முன்னணி வீரராக திகழும் விஜேந்தர் சிங் தொடர்ந்து 10வது முறை வெற்றி பெற்று தனது சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துள்ளார். 

குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங், ஓரியன்டல், ஆசிய பசிபிக் சாம்பியன் உள்ளிட்ட பட்டங்களை பெற்றுள்ளார். கடந்த 2015ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் விஜேந்தர் சிங் தொழில் முறை குத்துச்சண்டை போட்டியில் விளையாடி வருகிறார். ஏற்கனவே 9 முறை தொடர்ந்து இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற விஜேந்தர், நேற்று ஆப்பிரிக்க சாம்பியன் எர்னஸ்ட் அமுஸுவுடன் மோதினார்.

பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியில், விஜேந்தர் சிங் வெற்றி பெற்றார். இதனால் தொழில் முறை குத்துச்சண்டை போட்டியில் தொடர்ந்து அவர் தனது 10வது வெற்றியை பதிவு செய்தார். இதன் மூலம், தனது ஆசிய பசிபிக் குத்துச் சண்டை பட்டத்தை விஜேந்தர் சிங்  தக்க வைத்துள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close