விராட் கோலியை வாழ்த்த இலங்கையில் இருந்து வந்த ரசிகர்!

  நந்தினி   | Last Modified : 27 Dec, 2017 04:05 pm


மும்பையில் நேற்று விராட்- அனுஷ்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடந்ததைவிட, நட்சத்திரங்கள் திரண்டு வந்து வாழ்த்து தெரிவித்ததே ஹைலைட். கிரிக்கெட் பிரபலங்கள், பாலிவுட் திரையுலகத்தினர் என விழா நடந்த இடமே ஸ்தம்பித்தது. 


இதற்கு நடுவே பிரபலங்கள் அல்லாமல் தன்னுடைய தீவிர ரசிகர் ஒருவரை விராட், தனது நிகழ்ச்சிக்கு வரவேற்றுள்ளார். ஆனால், அது உள்நாட்டு ரசிகரில்லை. விராட்டின் மிக தீவிரமான ரசிகரான கையன் சேனநாயகே, இலங்கையைச் சேர்ந்தவர். கிரிக்கெட் ரசிகராக இருப்பவர்கள், மற்ற நாட்டு வீரர்கள் மீதும் அளவுகடந்த பாசத்தை வைத்திருப்பதற்கு இது ஒரு உதாரணம். அதிலும், ரசிகனை விராட் அழைத்திருப்பது அனைவரிடத்திலும் ஆச்சரியத்தை உண்டாக்கியிருக்கிறது. 


இது குறித்து கையன் கூறுகையில், "இங்கிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. விராட் என்னுடைய நல்ல நண்பர். என்னை இந்நிகழ்ச்சிக்கு அவர் அழைப்பு விடுத்தார்" என்றார். தவிர, விராட்டை தான் முதன்முதலில் சந்தித்த தருணத்தையும் உடன் பகிர்ந்துள்ளார். 


"2007ம் ஆண்டு மலேஷியாவில் நடந்த யு-19 உலகக் கோப்பை போட்டியின் போது சந்தித்தேன். அதற்கு முன், இலங்கைக்கும் அவர் வந்திருந்தார். அவர் எப்போது வந்தாலும் நாங்கள் சந்தித்துக் கொள்வோம். அவர் ஒரு சிறந்த கேப்டன். சிறந்த பேட்ஸ்மேன். நான் கிரிக்கெட் மற்றும் வீரர்களை விரும்புபவன்" என்றும் தெரிவித்தார். 


நிகழ்ச்சியில் கையன், மற்ற இந்திய அணி வீரர்களுடன் உரையாடி, புகைப்படம் எடுத்துக் கொண்டார். கிரிக்கெட் கடவுளாக போற்றப்படும் சச்சின் டெண்டுல்கர், சுழற்பந்து வீச்சில் சிறந்து விளங்கும் ஜடேஜா, அஷ்வின், யார்க்கர் ஸ்பெஷல் வீரர் பும்ரா, நடிகை கத்ரீனா உள்ளிட்டோருடன் எடுத்த போட்டோக்களை கையன் வெளியிட்டுள்ளார்.


சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close