2018 காமன்வெல்த் போட்டிக்கு சாக்ஷி, பபிதா தகுதி

  நந்தினி   | Last Modified : 30 Dec, 2017 11:23 pm


ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்டில் காமன்வெல்த் போட்டிகள், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 4ம் தேதி தொடங்கி 15ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கு, ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்தியாவின் மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் (62 கிலோ) தகுதிப் பெற்றுள்ளார். 

சாக்ஷியுடன், வினேஷ் போகட் (50 கிலோ), பபிதா குமாரி (54 கிலோ), பூஜா தண்டா (57 கிலோ), திவ்யா கரண் (68 கிலோ), கிரண் (76 கிலோ) ஆகியோரும் தகுதி அடைந்துள்ளனர். 

காமன்வெல்த் போட்டிக்காக இந்தியாவில் தகுதிச் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடந்த பெண்கள் பிரிவு ஆட்டத்தில் சாக்ஷி மாலிக் வெற்றி பெற்று தகுதி அடைந்தார். முன்னதாக ஆண்கள் பிரிவில் நடந்த போட்டியில், சுஷில் குமார் (74 கிலோ) வெற்றி பெற்று, காமன்வெல்த் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close