வெண்கலம் வென்றார் விஸ்வநாதன் ஆனந்த்

  SRK   | Last Modified : 31 Dec, 2017 06:17 pm


இந்திய நட்சத்திர செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் நேற்று நடைபெற்ற பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். 

இரு தினங்களுக்கு முன் அவர் உலக ராபிட் செஸ் சாம்பியன்ஷிப் வென்ற நிலையில், பிளிட்ஸ் போட்டியிலும் வெண்கலம் வென்று அசத்தியுள்ளார். பிளிட்ஸ் போட்டியில் 16 புள்ளிகளுடன் உலக சாம்பியன் மாக்னுசன் தங்கம் வென்றார். செர்கெய் கர்ஜகின் 14.5 புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பிடித்தார்.

பிளிட்ஸ் தொடரில் 5 போட்டிகளில் வென்றும், 5 போட்டிகளை சமன் செய்தும், தோல்வியடையாமல் வெண்கலகம் வென்றார் ஆனந்த். அதேநேரம், மாக்னுசன் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்தாலும், அதிக வெற்றிகளுடன் முதலிடம் பிடித்தார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close