சச்சின் மகளுக்கு போன் மூலம் மிரட்டல் விடுத்தவர் கைது

  Anish Anto   | Last Modified : 08 Jan, 2018 07:23 am


முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சினின்  மகளுக்கு போன் மூலம் மிரட்டல் விடுத்த நபரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்திய அணியின் தலை சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான சச்சின் டெண்டுல்கர் தற்போது கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகி ஓய்வு காலத்தில் உள்ளார். இவருக்கு அர்ஜுன் மற்றும் சாரா என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதில் அர்ஜுன் இளையோர் அணியில் விளையாடி வருகிறார்.

சச்சினின் மகளான சாராவுக்கு சமீபகாலமாக அடையாளம் தெரியாத நபர் ஒருவர் போன் மூலம் தன்னை திருமணம் செய்யும் கொள்ளும் படி தொல்லை செய்து வந்துள்ளார். சாரா தொடர்ந்து மறுப்பு தெரிவிக்கவே ஒரு கட்டத்தில் அவர் சாராவை கடத்தி சென்று விடுவதாக மிரட்டி உள்ளார். இதனை தொடர்ந்து சச்சினின் குடும்பத்தார் இது குறித்து மும்பை போலீசில் புகார் அளித்துள்ளனர். 

அந்த நபர் கால் செய்த நம்பரை வைத்து தேடிய போது அவர் மேற்கு வங்கத்தில் உள்ள மஹிஷதல் எனும் பகுதியில் இருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து மேற்கு வங்கம் விரைந்த மும்பை போலீசார் உள்ளூர் அதிகாரிகளின் உதவியுடன் சாராவுக்கு மிரட்டல் விடுத்த நபரை கைது செய்தனர். மிரட்டல் விடுத்தவரின் பெயர் டெப்குமார் மைட்டி (32) என்பது தெரியவந்துள்ளது.

மும்பை கிரிக்கெட் மைதானத்தில் வைத்து சாராவை பார்த்ததாகவும், தனது உறவினர் மூலம் சச்சினின் வீட்டு தொலைபேசி எண்ணை தெரிந்து கொண்டதாகவும் அவன் போலீசாரிடம் தெரிவித்துள்ளான். மேலும் திருமணம் செய்யும்படி சாராவுக்கு மிரட்டல் விடுத்ததையும் ஒப்புக் கொண்டுள்ளான். டெப்குமாருக்கு சிறிது மனநலம் சரி இல்லை என்றும், அதற்கான சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது தாய் மற்றும் சகோதரர் தெரிவித்துள்ளனர்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close