தேசிய குத்துச்சண்டை: சரிதா, சோனியா, சார்ஜுபாலா தங்கம் வென்றனர்

  நந்தினி   | Last Modified : 12 Jan, 2018 05:45 pm


ஹரியானாவின் ரோஹ்தாக்கில் தேசிய பெண்கள் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில், முன்னணி வீராங்கனைகளான சரிதா, சோனியா, சர்ஜுபாலா ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றுள்ளனர். 

மணிப்பூரின் சர்ஜுபாலா தேவி (48 கிலோ), தங்கப்பதக்கத்துடன், சிறந்த குத்துச்சண்டை வீராங்கனை ட்ராஃபியையும் தட்டிச் சென்றார். இது அவருடைய இரண்டாவது தேசிய டைட்டிலாகும். சரிதா தேவி (60 கிலோ), ரயில்வே ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் போர்டின் (ஆர்எஸ்பிபி) பவித்ராவை வீழ்த்தி, தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். சோனியா லெதர் (57 கிலோ), ஆர்எஸ்பிபி-ன் சஷி சோப்ராவை தோற்கடித்து, தங்கம் வென்றார்.  

இவர்களை தவிர, மீனா குமாரி (54 கிலோ), ராஜேஷ் நார்வல் (48 கிலோ), பூஜா ராணி (75 கிலோ) ஆகியோர் தங்கம் வென்று அசத்தினர். போட்டியில் ஒட்டுமொத்தமாக 5 தங்கம், 2 வெண்கலம் வென்ற ஆர்எஸ்பிபி அணி, அணிகளுக்கான சாம்பியன் பட்டத்தை வென்றது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close