பாகிஸ்தானிலிருந்து தவானுக்கு பாராட்டு மழை

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 19 Jan, 2018 07:42 pm

இந்திய அணியின் தவானுக்கு பாகிஸ்தானில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இந்திய அணியின் துவக்க வீரரான தவான் பாகிஸ்தான் ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்து வருகிறார். அப்படி அவர் என்ன செய்தார் என நினைக்கிறீர்களா? ஒரே ஒரு ட்வீட்தான் அதற்கு காரணம். ஆமாம். பாகிஸ்தான் அணியின் சோயிப் மாலிக் நியூசிலாந்து அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் பேட் செய்தபோது  ரன் சேர்க்க ஓடும்போது அந்த ஃபீல்டில் கீழே விழுந்துவிட்டார்.

இதனால் பலத்த காயம் அடைந்த அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் தவான் , மாலிக் விரைவில் குணமாகி வரவேண்டும் எனவும் அவர் திரும்ப களத்தில் விளையாடுவார் எனவும் அவரின் டிவிட்டர் பக்கத்தில் கூறியிருந்தார். தவானுடைய இந்த செயல் பாகிஸ்தான் ரசிகர்களை உணர்ச்சிமயத்தில் தத்தளிக்க வைத்துவிட்டது.

அவரது அந்த ட்விட்டர் பதிவையொட்டிதான் தற்போது தவானுக்கு பாகிஸ்தான் ரசிகர்கள் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close