கோலிக்கு ஆதரவு தரும் கங்குலி

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 24 Jan, 2018 10:13 pm

இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் கிரிக்கெட் தொடர் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் தோற்ற இந்திய அணியின் மீது ஏகத்துக்கும் விமர்சனங்கள் குவிந்தன. கோலியின் தலைமை பண்பு சரியில்லை எனவும் குற்றசாட்டுகளை  வைத்தனர். சேவாக்கும் கூட அவருக்கே உரிய பாணியில் காட்டமாக கருத்து கூறினார்.

இந்நிலையில் கோலிக்கு முன்னாள் வீரர் கங்குலி ஆதரவு தெரிவித்திருக்கிறார். இதுபற்றி பேசிய அவர், வெளிநாட்டுக்கு சென்று பெரிய அணியுடன் இப்போதுதான் கோலி தலைமையிலான அணி விளையாடுகிறது ஆகவே அதற்குள் அவர் மேல் விமர்சனத்தை வைக்கவேண்டாம். அணித்தலைமை சாதுர்யம் யாருக்கும் அவ்வளவு எளிதில் வருவதில்லை. எனவே அவருக்கு இன்னும் நிறைய போட்டிகளில் வாய்ப்பை கொடுக்கலாம். அதன் பின்னர் கோலி மீது விமர்சனத்தை கொட்டலாம்' என்றார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close