கிரிக்கெட் விளையாடிய இளைஞர் மரணம்! அதிர்ச்சி வீடியோ

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 27 Jan, 2018 02:18 pm

ஹைதராபாத்தில் கிரிக்கெட் விளையாடி இளைஞர் ஒருவர் திடீரென்று மைதானத்தில் சுருண்டு விழுந்து பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்தில் உள்ளூர் அணிகளுக்கிடையேயான கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இதில், நேற்று இரவு நடந்த போட்டியில் இரு அணிகள் மோதின. அப்போது, பந்து வீசிய லாயட் ஆன்டனி என்ற 23 வயது இளைஞர் திடீரென்று சுருண்டு விழுந்தார். அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் மரணம் அடைந்துவிட்டார் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். அவருக்கு திடீர் இதயத் துடிப்பு முடக்கம் ஏற்பட்டிருக்கிறது என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்த விளையாட்டு வீடியோ இப்போது சோஷியல்மீடியாவில் பரவி வருகிறது. பந்து வீச லாயல் ஓடி வருகிறார். திடீரென்று சுருண்டு விழுகிறார். அருகில் உள்ளவர்கள் என்ன ஆயிற்று என்று பதற்றத்தில் அவரைக் காப்பாற்ற ஓடி வருகின்றனர். 

லாயல் ஆன்டனி ஹைதராபாத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பணியாற்றி வந்தார். நண்பர்களுடன் சேர்ந்து அடிக்கடி பொது வெளியில் கிரிக்கெட் விளையாடி வந்திருக்கிறார். இந்த சூழலில் திடீரென்று அவர் கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டு உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close