கவாஸ்கரை நெருங்கினார் கோலி

  SRK   | Last Modified : 29 Jan, 2018 09:45 am


சர்வதேச அளவில் டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கப்படும் ஹால் ஆப் ஃபேம் மரியாதையில், இந்திய கேப்டன் விராட் கோலி முன்னாள் மேற்கிந்திய பேட்ஸ்மேன் ப்ரையன் லாராவை முந்தினார். 

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளை தோற்றாலும், 3வது போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இதில் கோலி 54 மற்றும் 41 ரன்கள் அடித்திருந்தார். 900 புள்ளிகளில் இருந்த கோலி அதைத்  தொடர்ந்து வெளியிடப்பட்ட புதிய பட்டியலில், 12 புள்ளிகள் முன்னிலை பெற்றார். மேற்கிந்திய முன்னாள் நட்சத்திர பேட்ஸ்மேன் ப்ரையன் லாரா உள்ளிட்டவர்களை முந்திய கோலி, 915 புள்ளிகள் கொண்ட கவாஸ்கரை நெருங்கி வருகிறார்.

இந்த பட்டியலில், முன்னாள் ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் ப்ரேட்மேன் முதலிடத்தில் உள்ளார். தற்போதய ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

அடுத்ததாக, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஜூன் மாதம் நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டியில், கோலி விளையாடினால், ஐந்து புள்ளிகள் பெற்று, கவாஸ்கர், இங்கிலாந்தின் ஜோ ரூட் ஆகியோரை முந்த வாய்ப்புள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close