இந்திய ஓபன் குத்துச்சண்டை அரையிறுதியில் மேரி கோம், ஷிவ தபா

  நந்தினி   | Last Modified : 31 Jan, 2018 05:30 pm


டெல்லியில் நடைபெற்று வரும் இந்திய ஓபன் குத்துச்சண்டை போட்டியின் அரையிறுதிக்கு மேரி கோம், ஷிவ தபா முன்னேறியுள்ளனர்.

12ம் நிலை வீராங்கனை, ஐந்து முறை உலக மற்றும் ஆசிய சாம்பியனான மேரி கோம், 49 கிலோ எடைப் பிரிவில், பினா தேவியை 5-0 என்ற கணக்கில் தோற்கடித்தார். இதே போல், சரிதா தேவி 60 கிலோ எடைப் பிரிவில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார். 

ஆண்கள் பிரிவில், காமன்வெல்த் கேம்ஸ் தங்கப் பதக்க வீரரான மனோஜ் குமார் (69 கிலோ), 5-0 என்ற கணக்கில் பவன் குமாரை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார். 

உலக அளவிலான போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற வீரர், மூன்று முறை ஆசிய சாம்பியன் ஷிவ தபா (60 கிலோ), ஷெர்பேக்கை வீழ்த்தினார். மனிஷ் கவுசிக், அமித் பன்கல், ஷியாம்குமார், சதீஷ்குமார், அன்குஷ் தாகியா ஆகிய வீரர்களும் அரையிறுதிக்கு முன்னேறினர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close