கேலோ பள்ளி விளையாட்டுக்களை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

  SRK   | Last Modified : 01 Feb, 2018 10:14 am


பள்ளி அளவில் விளையாட்டு வீரர்களை உருவாக்கும் கேலோ இந்தியா பள்ளி விளையாட்டுக்களை பிரதமர் மோடி நேற்று துவக்கி வைத்தார். 

17 வயதிற்குட்பட்ட மாணவர்கள் கலந்துகொள்ளும் இந்த விளையாட்டு போட்டிகள், ஒலிம்பிக்கில் இந்தியா பதக்கம் வெல்ல அதிக வாய்ப்புள்ள 16 விளையாட்டுகளுக்கு மட்டும் நடத்தப்படும். 

"சிறந்த வீரர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு சிறந்த பயிற்சியாளர்களை நியமித்து பயிற்சியளிக்கப்படும். தேவைப்பட்டால் வெளிநாடு அனுப்பியும் பயிற்சியளிப்போம்" என்றார் மோடி. 

இந்த போட்டிகளின் முடிவில் சிறந்த 1000 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு ஆண்டுக்கு 5 லட்ச ரூபாய் கல்வி உதவியாக வழங்கப்படும். ஏழை மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்ளாமல் போய்விடக்கூடாது என்பதற்காக இந்த கல்வியுதவி அளிக்கப்படுகிறது என மோடி கூறினார். 

இந்த வாரம் முழுக்க நடக்கும் இந்த போட்டிகள், தொலைக்காட்சியில் நேரலையில் ஒளிபரப்பாகும். அம்பு எய்தல், தடகளம், பேட்மிண்டன், கூடைப்பந்து, குத்துசண்டை, கால்பந்து, ஜிம்னேஸ்டிக்ஸ், ஹாக்கி, ஜூடோ, கபடி, கோ கோ, நீச்சல், துப்பாக்கி சுடுதல், கைப்பந்து, பளு தூக்குதல், மல்யுத்தம் ஆகிய விளையாட்டுக்கள் இந்த தொடரில் நடைபெறும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close