உயர்ந்த தரவரிசையை கொண்ட இந்திய ஸ்குவாஷ் வீரரானார் சவுரவ்!

  நந்தினி   | Last Modified : 02 Feb, 2018 06:36 pm


தொழிற்முறை ஸ்குவாஷ் சங்கம் இன்று புதிதாக வெளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர் சவுரவ் கோஷல், 5 இடங்கள் ஏற்றம் கண்டு 14-வது இடத்தைப் பிடித்துள்ளார். இதன் மூலம், இந்திய வீரர்களில் மிகவும் உயரிய தரவரிசையைக் கொண்ட வீரர் என்ற பெருமையைக் கோஷல் படைத்திருக்கிறார். 

இந்திய வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா, மூன்று இடங்கள் இறங்கி 17-வது இடத்தைப் பிடித்துள்ளார். தீபிகா பல்லிகல் 20-வது இடத்தில் நீடிக்கிறார். முன்னாள் இந்தியன் தேசிய சாம்பியன் ஹரீந்தர் பால் சந்து 49-வது, மகேஷ் மன்கோன்கர் 64-வது, ரமித் தண்டொன் 16 இடங்கள் முன்னேறி 65-வது, விக்ரம் மல்ஹோத்ரா 68-வது இடத்தையும் பிடித்துள்ளனர். 

இவர்களைத் தவிர, பெண்கள் பிரிவு வரிசையில் ஜோஷ்னா, தீபிகாவுக்குப் பின், 3-வது இடத்தில் சுனைனா குருவில்லா இருக்கிறார். 104 இடத்தில் இருந்து 89 இடத்திற்கு ஏறியுள்ளார். சசிகா இன்ஹால் 96-வது இடத்தில் உள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close