பிட்ச்சை மாற்றியது தென் ஆப்பிரிக்காவுக்கே பாதகமாக அமைந்துவிட்டது

  நந்தினி   | Last Modified : 06 Feb, 2018 02:28 pm


தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய அணி, அந்த அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரை 1-2 என இழந்தது. இருப்பினும், 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் இந்திய அணி, 2-0 என முன்னிலையில் உள்ளது. மூன்றாவது போட்டி நாளை தொடங்க இருப்பதால், ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்பில் இந்தியா இருக்கிறது. 

இதற்கிடையே, தென் ஆப்பிரிக்கா அணியின் தோல்வியை முன்னாள் கிரிக்கெட் வீரரும், பயிற்சியாளருமான ரே ஜென்னிங்ஸ் விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், "டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்காக ஆடுகளத்தை மாற்றி அமைத்தது தென் ஆப்பிரிக்காவுக்கே பாதகமாக அமைந்துவிட்டது. இதனால் ஒருநாள் தொடரை இழக்கும் சூழ்நிலையில் தென் ஆப்பிரிக்கா உள்ளது. வேகப்பந்து வீச்சுக்கு ஏற்றவாறு பிட்ச்கள் மாற்றியது இவர்களுக்கு உதவியாக இருக்காது. ஏனென்றால் இந்திய அணியில் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்திய அணியில் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லை. தற்போது பலர் உள்ளனர். 

தென் ஆப்பிரிக்காவின் ஆடும் லெவனிலேயே தவறு இருக்கிறது. உலக கோப்பைக்கு பயிற்சி எடுக்கும் விதமாக நாம் விளையாடி வருகிறோம். ஆனால், அணியில் அனுபவம் இல்லாத இளம் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் இந்த சீசனில் இவ்வாறு தோல்வி அடைந்து வந்தால், உலக கோப்பை போட்டியில் யார் விளையாடுவது. எதிர்காலத்தை கணித்து செயல்பட வேண்டும். 


மார்க்ரம் கேப்டன் பொறுப்புக்கு தகுதியானவர் தான். இருந்தாலும் அதற்கு அவர் தயாராகவில்லை. ஒருநாள் போட்டியில் அவருக்கு போதுமான அளவு அனுபவம் இல்லை. வீரர்கள் நிலையான பிறகே அவறுகளுக்கு கேப்டன் பொறுப்பை தர வேண்டும். விராட் கோலியை பாருங்கள். அவர் நிலையான ஒரு பேட்ஸ்மேனான பிறகு தான் அவர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 

கோலி இன்னும் சிறந்த கேப்டனாக மாற வேண்டும். இந்திய கிரிக்கெட் அமைப்பு, அவரிடம் அதனை உருவாக்க வேண்டும். தோனியிடம் இருந்து கோலிக்கு கேப்டன்ஷிப் செல்வது பெரிய மாற்றமாகும். தோனி மிகவும் பொறுமையானவர். ஆனால், கோலி அதற்கு முற்றிலும் மாறானவர். இளம் வீரர்களிடையே கோலி குறித்த ஓர் அச்ச உணர்வு இருக்கலாம். ஒரு வழிகாட்டியை அவருக்கு இந்திய கிரிக்கெட் தேர்வு செய்யும் பட்சத்தில், கோலி மென்மெலும் சிறப்புடையவராக திகழ்வார்" என்றார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close