பார்வையற்றோர் கிரிக்கெட் சங்கத்தை அங்கீகரிக்க சச்சின் வேண்டுகோள்

  நந்தினி   | Last Modified : 07 Feb, 2018 07:33 pm


இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவன் சச்சின் டெண்டுல்கர், இந்திய பார்வையற்றோர் கிரிக்கெட் சங்கத்தை அங்கீகரிக்குமாறு பிசிசிஐ-யிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

கடந்த ஜனவரி 20ம் தேதி பார்வையற்றோருக்கான உலக கோப்பை கிரிக்கெட்டில், இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்திய சாம்பியன் பட்டம் வென்றது. இதனை அடுத்து, பிசிசிஐ-ன் நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராயிடம், பார்வையற்றோருக்கான கிரிக்கெட் சங்கத்தை அங்கீகரிக்குமாறு சச்சின் கோரிக்கை வைத்துள்ளார். 

அவர் எழுதிய கடிதத்தில், "நான்காவது தொடர் வெற்றியை பெற்றுள்ள இந்திய பார்வையற்றோர் கிரிக்கெட் அணி, உலக கோப்பையை வென்றுள்ளது. மேலும், இந்தியாவின் இரண்டாவது உலக கோப்பை இது ஆகும். இதனால், அவர்களின் சங்கத்தை அங்கீகரிக்க வேண்டுமென்ற கருத்தை உங்களிடம் வைக்க விரும்புகிறேன். மேலும், வீரர்களுக்கு பிசிசிஐ ஓய்வூதிய திட்டம் மூலம், அவர்களுக்கு நிதி தொடர்பான பாதுகாப்பை வழங்கலாம்.

பிசிசிஐ அங்கீகரிப்பால், இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஊனமுற்றோருக்கான பாதுகாப்பு, கொண்டாட்டம் மற்றும் போராடும் சூழ்நிலை உருவாகாத புதிய சகாப்தம் உருவாகும். தவிர, இது மேலும் பல வீரர்களை அவர்களுடைய கனவை எட்ட ஊக்கமளிக்கும். நான் முனைப்புடன் உங்களின் உடனடி நடவடிக்கையை எதிர்பார்க்கிறேன்" என்று சச்சின் குறிப்பிட்டுள்ளார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close